செம்மணியில் 6 எலும்புக்கூடுகள்! வெள்ளை நிற பாசிமணி, வளையல் அடையாளம்!!

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியில் இன்றைய அகழ்வின் போது 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 437 ஆக அதிகரித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 36 ஆம் நாள் அகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

இன்றைய அகழ்வின் போது புதிதாக 6 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 5 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 437 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 428 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் இன்றைய அகழ்வின் போது வெள்ளை நிற பாசிமணியும், இரும்புத் தகட்டுத் துண்டும் ஒன்றும், வளையல் ஒன்றும் அடையாளம் காணப்பட்டு சான்றுப்பொருள்களாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles