72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு மம்மூட்டி, கார்த்திக் ஆர்யன் சிறந்த நடிகர்கள்!

72ஆவது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் உள்ள நேஷனல் மீடியா சென்டரில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தால் அதிகாரபூர்வமாக இன்று அறிவிக்கப்பட்டன. இதில் மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் இந்தி நடிகர் கார்த்திக் ஆர்யன் ஆகியோர் சிறந்த நடிகர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், சிறந்த நடிகைக்கான தேசிய விருதை நடிகை யாமி கௌதம் வென்றுள்ளார்.

‘ப்ரமயுகம்’ படத்துக்காக நடிகர் மம்மூட்டியும், ‘சந்து சாம்பியன்’ படத்துக்காக கார்த்திக் ஆர்யனும் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதே போல “ஆர்டிகிள் 370” படத்துக்காக யாமி கவுதம் சிறந்த நடிகையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

2024ஆம் ஆண்டில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்றளிக்கப்பட்ட திரைப்படங்களை உள்ளடக்கி இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்பட இயக்குநர் ஜெயராஜ் தலைமையிலான 11 பேர் கொண்ட நடுவர் குழு இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்களைத் தேர்வு செய்துள்ளது.

இந்த ஆண்டுக்கான விருதுப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு மொழித் திரைப்படங்களும் போட்டியிட்டன. இந்தித் திரையுலகில் இருந்து ‘ஆர்ட்டிகிள் 370’, ‘ஸ்ரீகாந்த்’ மற்றும் ‘சந்து சாம்பியன்’ ஆகிய படங்கள் கவனத்தைப் பெற்றன. தமிழ் சினிமாவின் சார்பில் ‘மகாராஜா’, ‘மெய்யழகன்’ மற்றும் ‘அமரன்’ ஆகிய திரைப்படங்களும், தெலுங்குத் திரையுலகில் இருந்து ‘கல்கி 2898 ஏடி’, ‘லக்கி பாஸ்கர்’ மற்றும் ‘தேவரா: பார்ட் 1’ ஆகிய படங்களும் விருதுப் பட்டியலில் முத்திரை பதித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles