இங்கிலாந்து அரசியலில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றமாக, ஆளும் தொழிற்கட்சியின் புதிய தலைவரான அண்டி பர்ன்ஹாம் இங்கிலாந்தின் புதிய பிரதமராக இன்று திங்கட்கிழமை (20) முறைப்படி பதவியேற்றுள்ளார்.
நிலையில், தற்போதைய பிரதமரான, கெய்ர் ஸ்டார்மர் இன்று (20) தனது பதவியை இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
தற்போதைய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று மன்னர் சார்லசை நேரில் சந்தித்து தனது உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார்.
இந்நிலையில். புதிய அரசாங்கத்தை அமைக்க அண்டி பர்ன்ஹாமிற்கு மன்னர் முறைப்படி அழைப்பு விடுப்பதுடன், புதிய பிரதமர், மன்னரின் கையை முத்தமிட்டுத் தனது நம்பிக்கையை உறுதிப்படுத்தியவுடன் உத்தியோகபூர்வமாகப் பிரதமராக அறிவிக்கப்படுவார்.
அத்துடன், அரண்மனை நிகழ்வுகள் முடிந்தவுடன், புதிய பிரதமராகப் பொறுப்பேற்கும் அண்டி பர்ன்ஹாம் இலண்டனில் உள்ள உத்தியோகபூர்வ பிரதமர் இல்லமான ’10 டவுனிங் வீதி வாசலில் நாட்டு மக்களுக்குத் தனது முதல் உரையை நிகழ்த்தவுள்ளார்.
2016ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறியதில் இருந்து இதுவரை 6 பிரதமர்களும், குறிப்பாக 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு 4 பிரதமர்களும் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
