யாழில் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் சந்திப்பு

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் தலைமையிலான ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள், தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இந்தச் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் ஜெட்விங் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாணம் மாநகர மேயர் வி.மதிவதனி மற்றும் பல கட்சிகளின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள், நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் மயூரன் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் கலாநிதி க.சர்வேஸ்வரன் உள்ளிட்ட பல பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சமகால அரசியல் நிலவரம், செம்மணியில் அகழப்படும் மனிதப் புதைகுழி தொடர்பான விசாரணைகளில் சர்வதேச நாடுகளின் பங்கு மற்றும் பங்களிப்பு குறித்து இதன்போது விசேடமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினர் நாளைமறுதினம் யாழ். திண்ணை விடுதியில் ஊடகவியலாளர்களைச் சந்திக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles