‘தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய்’ – ஜனநாயகனில் வரவேற்பைப் பெயர் டைட்டில்!

ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) வெளியானது.

தமிழகத்தில் காலை 8.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. எனினும் வெளிநாடுகளில் காலை 4.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.

விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி படம் வெளியாவதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆவலுடன் படத்தை கண்டு ரசித்தனர்.

முதல்வராக பதவியேற்ற பிறகு படம் வெளியாகியுள்ளதால், படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் ‘மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய்’ எனத் திரையிடப்பட்டது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை நோக்கி முதல்வர் விஜய் செய்த சைகையைக் காட்டி இந்த டைட்டில் போடப்பட்டதால், ரசிகர்கள் பலர் மிகுந்த ஆரவாரத்துடன் இதனைக் கொண்டாடினர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

ஜனநாயகன் திரைப்பட டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles