ஜனநாயகன் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் உலகம் முழுவதும் ரூ.128 கோடி வசூலித்துள்ளதாக ஏசியன் பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் முதல் நாளில் ரூ.141 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
கேவிஎன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் ஜன நாயகன் திரைப்படம் நேற்று (ஜூலை 23) உலகெங்கும் வெளியானது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழ் பிரச்னையால் தாமதமாக வெளியானது.
இந்தப் படம் ஏற்கெனவே இணையத்தில் வெளியாகி இருந்தாலும் முதல் நாளில் தமிழகத்தில் பல திரையரங்குகளில் காட்சிகள் ஹவுஸ் ஃபுல் ஆனதும் குறிப்பிடத்தக்கது.
ஜன நாயகன் படத்தில் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, நிழகல் ரவி, ரேவதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் தமிழகத்தில் ரூ.48 கோடி வசூலித்ததாகவும் வெளிநாட்டில் ரூ.30 கோடியும் மொத்தமாக ரூ.78 கோடி வரை வசூலித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
படக்குழு இன்னும் அதிகாரபூர்வமாக வசூல் குறித்து அறிவிக்காவிட்டாலும் ஜன நாயகன் லியோவின் முதல் நாள் வசூலை முறியடிக்கவில்லை என்றே பல ஊடகங்கள் வாயிலாக தெரிய வருகின்றது.
