சி.ஜே.பி கோரிக்கைகள் ஏற்பு: டெல்லி போராட்டம் நிறைவு

இந்தியா, டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் போராட்டத்தை முடித்துக் கொள்வதாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அமைச்சர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ் , மேற்படி அறிவிப்பை வெளியிட்டார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்தப் பேச்சுவார்த்தையின்போது ஏற்பட்ட உடன்பாட்டுக்கு இணங்க, போராட்டத்தை வாபஸ் பெறுவதாக சிஜேபியின் தலைமை செய்தித் தொடர்பாளர் சவுரவ் தாஸ், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வேண்டும், நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்,

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மீதான முதல் தகவல் அறிக்கைகளை திரும்பப் பெற வேண்டும் என்பன மாணவர்களின் பிரதான கோரிக்கைகளாக இருந்தன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles