யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று (29) ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டம் நாளை (30) மாலை வரை இரண்டு நாட்கள் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
