பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 11 பேர் பலி!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றின் மீது தீவிரவாதிகள் இரவோடு இரவாக நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இருபதுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பொலிஸ் நிலையத்தை கனரக ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன், அங்கு வந்துகொண்டிருந்த கூடுதல் படையினரை பதுங்கியிருந்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படைகள் ஒரு மணி நேரம் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சமரில் 15 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை. இருப்பினும் பாகிஸ்தானிய தலிபான்கள் (தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அல்லது TTP) மீது சந்தேகம் எழுந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles