இலங்கையை வந்தடைந்த இந்திய வெளியுறவுச் செயலர்!

இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, ஒரு நாள் பயணமாக இன்று கொழும்பை வந்தடைந்தார்.

இந்த பயணத்தின் போது, ​​அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி மற்றும் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே வழக்கமாக நடைபெறும் உயர்மட்டப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து, இந்தப் பயணம் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தி, முக்கிய முன்னெடுப்புகளுக்கான உத்வேகத்தை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles