கொழும்பில் பல முக்கிய சந்திப்புகள் மற்றும் ஆக்கபூர்வமான பேச்சுகளுடன் கூடிய ஒரு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்த இந்தியாவின் வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி, நேற்று மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
இந்த வெளியுறவுச் செயலரின் விஜயமானது, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் முழுமையான பரிமாணங்களை மீளாய்வு செய்வதற்கும், பன்முகத் தன்மையைக் கொண்ட இந்தியா – இலங்கை கூட்டுறவின் வலிமையை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
