சவூதி உளவுத்துறை ஈராக் பிரதமருடன் அவசர சந்திப்பு

சில வாரங்களுக்கு முன்பு நடந்த பயங்கர எல்லைத் தாக்குதலால் ஈராக் மற்றும் சவூதி அரேபியா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்தச் சூழலில், தூதரக உறவுகளைச் சீரமைக்கும் முயற்சியாக ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி மற்றும் சவுதி அரேபிய உளவுத்துறைத் தலைவர் காலித் பின் அலி அல் ஆகிய இருவரும் பக்தாத்தில் சந்தித்துப் பேசியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, பிரதமர் அல்-ஜைதியை ரியாத் நகருக்கு வருகை தருமாறு சவூதி உளவுத்துறைத் தலைவர் மீண்டும் அழைப்பு விடுத்ததார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 29 அன்று சவூதி மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்திய கூட்டுத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரதமர் ஜைதி தனது முந்தைய சவூதி பயணத்தை ரத்து செய்திருந்தார். அந்தத் தாக்குதலில் 5 ஈரானியர்கள் உட்பட ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரதமர் அலுவலகத் தகவல்களின்படி, பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் பாக்தாத் மற்றும் ரியாத் நகரங்கள் எவ்வாறு சிறப்பான முறையில் ஒருங்கிணைந்து செயல்பட முடியும் என்பதில் இரு தலைவர்களும் கவனம் செலுத்தினர்.

ஈராக்கிய மண் எந்தவொரு நாட்டின் மீதான தாக்குதலுக்கும் தளமாகப் பயன்படுத்தப்படாது என்ற தனது உறுதியை மீண்டும் சுட்டிக்காட்டிய பிரதமர் அல்-ஜைதி, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் பக்தாத் உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகள் மிகவும் பதற்றமான சூழலிலேயே இருந்து வருகின்றன.

தனது எண்ணெய் உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலுக்குப் பதிலடியாகவே ஈராக் மீதான கடந்த மாதத் தாக்குதலை சவூதிஅரேபியா நியாயப்படுத்தியது. மேலும், ஈரானுக்கு ஆதரவான ஈராக்கிய ஆயுதமேந்திய குழுக்களே அந்த ட்ரோன் தாக்குதலுக்குக் காரணம் என்றும் சவூதி குற்றம் சாட்டியது.

ஆனால், சசவூதிதி அரேபியாவின் இந்தக் குற்றச்சாட்டை ஈராக்கின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் முற்றிலுமாக நிராகரித்ததோடு, இந்த நடவடிக்கை நாட்டின் இறையாண்மையை மீறும் செயல் என்றும் கண்டித்தது. அதைத் தொடர்ந்து வந்த நாட்களில், எந்தவொரு பழிவாங்கும் தாக்குதலையும் தவிர்க்கும் பொருட்டு, ஈராக் அதிகாரிகள் நாடு முழுவதிலும் எல்லைகளிலும் பாதுகாப்பைத் தீவிரப்படுத்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles