ரஷ்யாவில் இருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை அமைக்கத் திட்டம்

ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்கு நேரடி ரயில் பாதை அமைப்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படவேண்டும் என ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்​னுலின் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய செய்தி நிறு​வன​மான ‘டாஸ்​’ இற்கு ரஷ்ய துணைப் பிரதமர் மாரத் குஸ்​னுலின் கூறி​யிருப்​ப​தாவது:

ஹோர்​முஸ் மற்​றும் பாஸ்​பரஸ் நீணைப் பகு​தி​களில் அதி​கரித்து வரும் ஆபத்துகளை எதிர்​கொள்ள மாற்​றுப் போக்​கு​வரத்து வழித்தடங்கள் அவசி​ய​மாகின்​றன. இதற்​காகத் துர்க்மெனிஸ்தான், ஈரான், ஆப்​கானிஸ்​தான் மற்​றும் பாகிஸ்தான் வழி​யாக இந்​தி​யப் பெருங்​கடலை அடை​யும் வகையில் ரயில் பாதையை அமைப்​பது குறித்து ஆய்வு செய்யப்பட வேண்​டும்.

இந்தியா​வுக்கு நேரடி​யாகப் போக்​கு​வரத்து வசதியை ஏற்​படுத்​தும் எந்​தவொரு திட்​ட​மும் ஏற்​கத்​தக்​கதே. இத்​திட்​டம் சாத்தியமானால், ரஷ்​யா​வுக்​கும் இந்​தி​யா​வுக்​கும் இடையே நிலப்​பரப்பு வழி​யாகவே நேரடி​யாக சரக்கு ரயில் போக்​கு​வரத்து வசதி உரு​வாகும்.

ரஷ்​யா​வின் கட்​டு​மானத் துறை ஆண்​டுக்கு மேலும் ஒரு டிரில்​லியன் ரூபிள் நிதி​யைக் கையாளும் திறன் கொண்டதாக உள்​ளது. அடுத்த 5 ஆண்​டு​களுக்கு இத்​தகைய தொடர் நிதி ஆதரவு கிடைத்​தால் கட்​டு​மானத் திறனை மேலும் விரிவுபடுத்த முடி​யும். – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles