இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி 51 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து மற்றுமொரு நிலநடுக்கமும் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட புளோரஸ் பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று பதிவாகியுள்ளது.
இது சுமார் 10 கி.மீ ஆழத்தில், மையம் கொண்டிருந்ததாக ஜெர்மனியின் GFZ புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.
