நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் – 2 திரைப்படத்தின் வெளியீட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் – 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இதில், நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் முதல் பாகத்தின் தோற்றத்திலேயே நடிக்கிறார். நடிகர்கள் மோகன்லால், சிவராஜ்குமார், ஹிருத்திக் ரோஷன், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் உருவாகும் படம் என்பதால் பாடல்கள் மற்றும் பின்னணி இசைகளின் மீது பெரிய ஆவல் எழுந்துள்ளது. இத்திரைப்படம் இந்தாண்டு ஒக்ரோபர் 15 ஆம் திகதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தை நவம்பர் 5 ஆம் திகதி வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம், தீபாவளி வெளியீட்டாக இப்படத்தைக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, நடிகர் ரஜினிகாந்த் ராஜ்கமல் தயாரிப்பில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
