பிரான்பற்று ஆலயத்தில் பொருத்தப்பட்ட சீன மின் விளக்குகள் பறிமுதல் – இதுவரை 235 பேர் பாதிப்பு

பண்டத்தரிப்பு பிரான்பற்று ஆலயத்தில் நேற்றைய திருவிழாவின் போது இருநூறுக்கும் மேற்பட்டோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை 235 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக பஸ் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண் பாதிப்புக்கான காரணத்தை கண்டறியும் நோக்கில் பொலிஸார் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த அதி கூடிய வாற்ஸ் கொண்ட சீனத் தயாரிப்பு மின் விளக்குகள் சிலவற்றை பொலிஸார் கையகப்படுத்தி எடுத்துச் சென்றுள்ளனர்.

கையகப்படுத்தப்பட்ட மின் விளக்குகள் தற்போது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன், அவற்றின் மின்சக்தி அளவு, பயன்பாட்டுத் தன்மை மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அவை அனுமதிக்கப்பட்டவையா அல்லது தடை செய்யப்பட்டவையா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles