உக்ரைனுக்கு சிறப்பு விஜயத்தை மேற்கொள்ளும் சர்வதேச தலைவர்கள்

உக்ரைனின் சுதந்திரத் தினத்தை முன்னிட்டு அமெரிக்க மற்றம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் அந்நகருக்கு இன்று விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

அமெரிக்க செனட்டர்களான ரிச்சர்ட் ப்ளூமென்டல் மற்றும் ஜேம்ஸ் லேன்க்ஃபோர்ட் ஆகியோர் விஜயம் மேற்கொள்ளவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது ரஷ்யாவிடமிருந்து தொடரும் பாலிஸ்டிக் ஏவுகணை அச்சுறுத்தல் மற்றும் மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்புகளின் அவசியம் குறித்து ஜெலன்ஸ்கி அவர்களுடன் கலந்தாலோசிப்பார் எனக் கூறப்படுகிறது.

அதேநேரம் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டாவும் António Costa , லக்சம்பர்க் பிரதமர் லூக் ஃபிரைடன் Luc Frieden உள்ளிட்ட அதிகாரிளும் இன்று உக்ரைனுக்கு பயணிக்கவுள்ளனர்.

மேலும் ஆண்டி பர்னம் பிரித்தானியாவின் பிரதமராக பொறுப்பேற்றப்பின் கீவ் நகருக்கு தனது முதலாவது வெளிநாட்டு விஜயத்தை மேற்கொள்கிறார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பர்னம் “உக்ரைனின் 35வது சுதந்திர தினத்தில், உக்ரைனிய மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளக்கூடாது. பிரித்து இன்று முதல், தேவைப்படும் காலம் வரை உங்களுக்குப் பின்னால் இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.

2022இல் ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிலிருந்து, இங்கிலாந்து உக்ரைனின் வலுவான ஆதரவாளர்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இதுவரை சுமார் £25 பில்லியன் (€29.2 பில்லியன்) ஆதரவை வழங்குவதாக உறுதியளித்துள்ளது, இதில் £16 பில்லியன் (€18.7 பில்லியன்) இராணுவ உதவியும் அடங்கும்.

இதேவேளை உக்ரைனுக்கு ஆதரவாக பிரித்தானியா செயற்பட்டு வரவதால் அந்நாட்டுடனான ரஷ்யாவின் இராஜதந்திர உறவு சீர்குலைந்துள்ளது. ரஷ்யா பல சந்தர்ப்பங்களில் பிரித்தானியா மீது அணுவாயுத தாக்குதல் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles