உயிருடன் உள்ளார் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி! மீண்டும் ஈரான் வெளியிட்ட காணொளி

மொஜ்தபா கமேனி உயிருடன் உள்ளாரா? என்ற விவாதங்கள் எழுந்துவரும் நிலையில் அவர் சிலருடன் உரையாகின்றமை போன்ற வீடியோவை மீண்டும் ஈரான் வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய கூட்டுத் தாக்குதலில் அப்போதைய ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கமேனி சில நாள்களிலேயே உச்ச தலைவராகப் பதவியேற்றார்.

பதவியேற்ற நாள் முதல், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை. எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.

அவருடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் காரணம்காட்டி தன்னுடைய தந்தையின் இறுதிச் சடங்கில்கூட அவர் பங்கேற்கவில்லை.

அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்தார் எனவும், அதனால் அவரது தோற்றத்தில் சிதைவு ஏற்பட்டிருக்கலாம் என்றும் முன்பே செய்திகள் வெளியாகின.

அதனால், அவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் உயிரிழந்தும்கூட இருக்கலாம் என அவ்வபோது செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

இதற்கு பதிலளிக்கும் வகையில் சில வாரங்களுக்கு முன்பு, ஈரான் தரப்பில் மொஜ்தபா கமேனி சிலருடன் பேசுகின்றமை போன்ற வீடியோ வெளியிடப்பட்டது.

இதையடுத்து, இதே மாதத்தில் இரண்டாவது முறையாக மீண்டும் ஒரு வீடியோவை ஈரான் வெளியிட்டிருக்கிறது.

இந்த விடியோவில் கமேனியை சிலர் சூழ்ந்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான கலந்துரையாடல்கள் தொடங்குவதற்கு முன்னர், அவர்கள் பிரார்த்தனை செய்வது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது.

இருப்பினும், இந்த இரண்டு வீடியோக்களிலும் திகதி குறிப்பிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles