தமிழ்ப் பொறியியலாளர் குடும்பம் உட்பட 39 அவுஸ்திரேலியர்கள் நேபாள வெள்ளத்தில் மாயம்

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சேர்ந்த தமிழ்ப் பொறியியலாளரான 47 வயது சந்திரசேகரன் முரளிதரன், 42 வயதான அவரது மனைவி ஷைலஜா முரளிதரன் மற்றும் அவர்களின் இரு மகன்களான 14 வயதான அஷ்வின், 11 வயதான ஆருஷ் ஆகியோர் நேபாள – திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி மாயமாகியுள்ளனர்.

கைலாஷ் மலை யாத்திரைக்காக ‘ஹிமாலயன் கிளேசியர் அட்வென்ச்சர்ஸ்’ அமைப்பின் மூலம் சுற்றுலாப் பயணிகளாகச் சென்ற இந்தத் குடும்பத்தினருடன், காலை உணவுக்குப் பிறகு எந்தத் தொடர்பும் இல்லை என்று உறவினர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

திபெத் – நேபாள எல்லைக்கு அருகிலுள்ள குடியேற்றச் சோதனைச் சாவடியை நோக்கிச் செல்ல அவர்கள் தயாராக இருந்தபோதுதான் இந்தத் பேரிடர் நிகழ்ந்துள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கால் அப்பகுதியில் கிராமங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டு மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், நேபாளப் பகுதியில் குறைந்தது 39 ஆஸ்திரேலியர்கள் மாயமாகியுள்னர் என்தை உறுதிப்படுத்தியுள்ளதோடு, அவர்களைத் தேடும் பணியில் அவசர அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் காணாமல் போன தமிழ்க் குடும்பத்தினர் மற்றும் அனைத்துப் பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பான திரும்புதலுக்காகவும், மீட்புப் பணிகளுக்காகவும் தமிழ் அவுஸ்திரேலிய சமூகமும் உலகத் தமிழர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles