நேபாள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,290 ஆக அதிகரிப்பு

நேபாள பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை இன்று வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி 1,290 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியா்கள் 275 போ் உட்பட 4,798இற்கும் மேற்பட்டோா் நிலை என்ன என்பது இதுவரை தெரியாத சூழலில், அவா்களைத் தேடும் பணி இன்று 10ஆவது நாளாக தொடா்கிறது.

திபெத் – நேபாள எல்லையில் பெரும் பனிப்பாறைச் சரிவால் லெண்டே நதியில் கடந்த ஓகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட பெருவெள்ளம், நேபாளத்தின் போடே கோஷி நதியில் சீறிப்பாய்ந்தது. சகதியுடன் பல அடி உயரத்துக்கு பெருக்கெடுத்த வெள்ளத்தில் கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் அடியோடு அழிந்தன. வீடுகள், கட்டடங்கள், வாகனங்கள், பாலங்கள், சாலைகள், நீா்மின் நிலையங்கள், இதர உள்கட்டமைப்புகள் அடித்துச் செல்லப்பட்டன.

போடே கோஷி நதி வெள்ளம், திரிசூலி, நாராயணி நதிகளிலும் கலந்து பெரும் சேதத்தை விளைவித்தது. ரசுவா, நுவாகோட், சித்வன், நவல்பராசி கிழக்கு, நவல்பராசி மேற்கு, கோா்கா, தனாஹு ஆகிய மாவட்டங்களை புரட்டிப் போட்ட இந்தப் பெருவெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,290 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பாலான உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் சிதைந்திருப்பதால், டிஎன்ஏ மாதிரிகளை சேகரித்த பின்னர், சர்வதேச விதிகளின்படி அரசே இறுதிச் சடங்குகளை நேபாள அரசே செய்து வருகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles