பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பலூச் விடுதலைப் படை (பி.எல்.ஏ.) நடத்திய இரு வேறு தாக்குதல்களில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.
பாகிஸ்தானின் மிகப்பெரிய மாகாணம் பலுசிஸ்தான். அங்கு அரசியல் அடக்குமுறை மற்றும் இராணுவ கெடுபிடிகளுக்கு எதிராக பிரிவினைவாதிகள் சுயாட்சி கோரி போராடி வருகிறார்கள்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஜியாரத் கிராஸ் பகுதியில் இராணுவ வாகனங்கள் மீது ‘ஃபாத்தே ஸ்குவாட்’ படை நடத்திய தாக்குதலில் 18 வீரர்களும், ஹாஜிகா பகுதியில் சிறப்பு அதிரடிப் படை நடத்திய தாக்குதலில் 7 வீரர்களும் கொல்லப்பட்டனர் என பி.எல்.ஏ. தெரிவித்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் .ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் பிஎல்ஏ மற்றும் தெஹ்ரீக்-இ-தாலிபான் அமைப்புகளைச் சேர்ந்த 48 பேர் கொல்லப்பட்டனர் எனத் தெரிவிகப்பட்டது.
