இலங்கை வந்தடைந்தார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கையை வந்தடைந்துள்ளார்.

மதியம் 1.25 மணிக்கு இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விசேட விமானமொன்றில் அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராஜ்நாத் சிங் இன்று முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாட்டில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொந்த உள்ளிட்ட பலரைச் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமுல்படுத்துவது குறித்து இந்த விஜயத்தின் போது மதிப்பாய்வு செய்யப்படும் என இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இவ்வாறு இலங்கைக்கு வருகை தருவது 38 ஆண்டுகளுக்குப் பிறகு என்பதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles