கிளிநொச்சி – ஏ-9 வீதியின் விழாவோடைப் பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று பிற்பகல் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்றவரே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
விபத்து இடம்பெற்றதையடுத்து காரின் சாரதி அங்கிருந்து தப்பியோடி, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
