கொரிய எல்லையில் பதற்றம் – தென்கொரியாவை ஊடுருவும் வடகொரியா

வட மற்றம் தென்கொரியாவை பிரிக்கும் இராணுவ எல்லைக் கோட்டைத் தாண்டி வட கொரியப் படைகள் ஊடுருவுவது உள்ளிட்ட செயற்பாடுகளை கண்காணித்து வருவதாக தென்கொரிய இராணுவம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பதிலடி கொடுக்க தேவையான , உறுதியான இராணுவத் தயார்நிலையில் இருப்பதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

ஓகஸ்ட் மாதத்தில் வட கொரியப் படைகள் இராணுவ எல்லைக் கோட்டை 20 முறைகளுக்கும் மேலாக கடந்து சென்றுள்ளதாக ‘சோசுன் இல்போ’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

‘சோசுன் இல்போ’ (Chosun Ilbo) வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் வடகொரிய படைகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளதாகவும், எல்லைக்கு அருகில் கண்ணிவெடிகளைப் பதித்தல் மற்றும் வேலி அமைத்தல் உள்ளிட்ட அரண் அமைக்கும் பணிகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனினும், எல்லைக் கடப்பு நிகழ்வுகளின் எண்ணிக்கை, இடங்கள் அல்லது நேரம் குறித்த விவரங்களை அச் செய்தித்தாள் வெளியிடவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles