பிரிட்டன் திரும்பிய பிறகு இளவரசர் ஹரி, லண்டனில் நடைபெற்ற முதல் இன்விக்டஸ் ஸ்பிரிட் விருதுகள் விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.
இதுவே அவர் பிரிட்டனில் முதல் முறையாக பொதுவெளியில் தோன்றிய சந்தர்ப்பமாகும்.
ஏர்ல் ஸ்பென்சரின் புதிய நினைவுக் குறிப்பான ‘ஸ்வான் சாங் : டைரி, மை சிஸ்டர்’ (Swan Song: Diary, My Sister) என்ற புத்தகத்தில், இளவரசி டயானாவின் மரணம், மற்றும் பிற சர்ச்சைக் குரிய கருத்துக்கள் தொடர்பில் அவரிடம் இதன்போது கேட்கப்பட்டது.
இருப்பினும் சசெக்ஸ் கோமகன் இந்த சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கருத்துரைக்க மறுத்துவிட்டார்.
அந்தப் புத்தகத்தில், வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்தைத் தொடர்ந்து மன்னர் சார்லஸ் உணர்ச்சியற்ற கருத்துக்களைத் தெரிவித்தார் என ஏர்ல் ஸ்பென்சர் குற்றம் சாட்டுகிறார்.
மேலும் மன்னர் சார்லஸ், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்தரின் உள்ளிட்ட அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள், இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்காமல், திட்டமிடப்பட்ட பொது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
