நைஜீரிய சிறையில் 37 கைதிகள் உயிரிழப்பு – போராட்டம் நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

நைஜீரியாவில் பொலிஸ் காவலில் இருந்த 37 கைதிகள் உயிரிழந்ததைக் கண்டித்து நூற்றுக்கணக்கான மக்கள் இன்று போராட்டம் நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்னர்.

நைஜர் மாநிலத்தின் தலைநகரான மின்னா நகரில், சட்டவிரோத தங்கச் சுரங்களில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நைஜீரியா பாதுகாப்பு மற்றும் குடிமைப் பாதுகாப்புப் படையின் (NSCDC) சிறை அறைகளில், தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் உறுதியளித்ததோடு, சில மூத்த அதிகாரிகளையும் இடைநீக்கம் செய்துள்ளது.

ஆனால் கோபம் கொண்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர்.

அத்துடன் தடிகள், அரிவாள்கள் மற்றும் பாரம்பரிய வேட்டைத் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்கள் நீதி கோரியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles