அனோஜனை மீட்டெடுக்க அரசு அதிகபட்ச தலையீடு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவிப்பு

சவூதி அரேபியாவில் சட்ட நடவடிக்கைகளை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் இளைஞரான சிவராசா அனோஜனை மீட்டெடுப்பதற்காகத் தற்போதைய அரசு அதிகபட்சமான தலையீட்டைச் செலுத்தி வருகின்றது என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சிவராசா அனோஜனின் விவகாரம் தொடர்பாக அரசு ஆரம்பக் கட்டத்திலிருந்தே மிகத் தீவிரமான மற்றும் அதிகபட்சமான தலையீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

வெளிவிவகார அமைச்சுடன் இணைந்து வெளிவிவகாரத்துறையும், அதேபோன்று ஜனாதிபதி செயலகமும் இதில் நேரடித் தலையீடுகளைச் செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இதுபோன்ற வெளிநாட்டு விவகாரங்களைக் கையாளும்போது அந்தந்த நாடுகளுக்கென உள்ள பிரத்தியேக சட்டதிட்டங்கள் மற்றும் இராஜதந்திர நடைமுறைகளின்படியே செயற்பட வேண்டியுள்ளது. இதில் எந்தவிதமான தாமதமும் ஏற்படவில்லை.

எவ்வாறாயினும், இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனைப் பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்கு அரசு எப்போதுமே அதிகபட்சமாகத் தலையிட்டுத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ச்சியாக முன்னெடுக்கும்.” – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles