கீவ் (Kyiv) பிராந்தியத்தில் ரஷ்யா நேற்றிரவு நடத்திய தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர் என அப்பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாள் முழுவதும் கீவ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன் தாக்குதல்கள் தொடர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரின் பல்வேறு பகுதிகளில் சிதிலங்கள் விழுந்ததாக கீவ் நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார். தென்மேற்குப் பகுதியான ஃபாஸ்டிவ் (Fastiv) மாவட்டத்தில் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது.
அங்கு வீடுகள், தொழிற்சாலை மற்றும் பயன்பாட்டுக் கட்டிடங்கள், விவசாய நிறுவன வளாகம் மற்றும் வாகனங்கள் என 24 இற்கும் மேற்பட்ட இடங்கள் தாக்குதலுக்குள்ளாகின என்று அவர் மேலும் கூறினார்.
இதேபோல் சுமி நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
