வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ.300 கோடி நிதியுதவி வழங்குகிறது அமெரிக்கா

பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதியுதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.

நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில், பனிப்பாறைகள் உடைந்து போடே கோஷி ஆற்றில் கடந்த ஆக. 26 ஆம் திகதி திடீரென பெரு வெள்ளம் ஏற்பட்டு அங்குள்ள பாலங்கள், கட்டடங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டன.

இந்தியர்கள் உள்பட உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,451 பேர் உயிரிழந்தனர். மேலும், 6,000இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.

பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகள் மீட்புப் பணிகளுக்கு தங்களுடைய வீரர்களை அனுப்புதல், நிவாரணப் பொருள்கள் வழங்கின.

ஏற்கனவே, இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 34 கோடிக்கும் மேற்பட்ட நிவாரணப் பொருள்களை அமெரிக்கா வழங்கியிருந்தது.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு உதவும் வகையில், சுமார் 31 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ. 300 கோடி) வழங்க அமெரிக்கா முன்வந்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாலங்கள் கட்டுவதற்கும், பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், பேரிடர் நிதியாகவும் நிதியுதவியை செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அவையின் அமர்வின் ஒரு பகுதியாக, நியூயார்க்கில் நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிஷிர் கானலை சந்தித்த பின், அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்க வெளியுறவுத் துறை துணைச் செயலர் அலிசன் ஹூக்கர், நிதியுதவி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

நேபாள பெருவெள்ளத்தில் காணாமல் போன 70 அமெரிக்கர்களின் குடும்பத்தினர் உள்பட மாயமானோருக்கு வருத்தம் தெரிவித்த ஹூக்கர், நிதியுதவி தொடர்பாக பேசினார்.

எதிர்கால பேரிடர் மீட்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், 13 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான டிரோன்களை வழங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles