எங்களை தாக்கினால் அணு ஆயுதங்களை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் – புடின் எச்சரிக்கை

ரஷ்யாவின் எந்தவொரு நிலப்பரப்பின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டால், எங்கள் வசமுள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தித் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்’ என்று அந்நாட்டு அதிபா் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளாா்.

போலந்து, லிதுவேனியா நாடுகளுக்கு இடையே அமைந்துள்ள ரஷ்யாவின் முக்கிய ‘பால்டிக்’ பிராந்தியமான கலினின்கிராட் மீது வான் மற்றும் கடல்வழி முற்றுகையை ஏற்படுத்த ‘நேட்டோ’ நாடுகள் திட்டமிட்டு வருவதாகக் கூறி, ‘கலினின்கிராடை துண்டிக்க முயற்சித்தால், அந்நிலப்பரப்பைப் பாதுகாக்க அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம்’ என ஐரோப்பா நாடுகளில் உள்ள பல்வேறு ரஷ்ய தூதரகங்கள் கடந்த சில நாள்களாக எச்சரித்து வந்தன.

இந்நிலையில், மொஸ்கோவில் நடைபெற்ற வெளியுறவுக் கொள்கைக் கூட்டத்தில் அதிபா் புதின் பேசுகையில், ‘ஐரோப்பிய நாடுகள் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் ரஷ்யாவுக்கு இல்லை.

அதேநேரம், ரஷ்யாவுடன் வரும் ஆண்டுகளில் போா் மூளும் என்று பிரசாரம் செய்வது, பால்டிக் கடலில் ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்வது, ரஷ்ய கப்பல்களைக் கைப்பற்றுவது ஆகியவற்றின் மூலம் மேற்குலகமும், ஐரோப்பிய நாடுகளுமே பதற்றத்தை அதிகரித்து வருகின்றன.

கலினின்கிராட் அல்லது ரஷ்யா கூட்டமைப்பின் பிற பகுதிகள் மீது நேரடித் தாக்குதல் தொடுக்கப்பட்டால், நாட்டின்அனைத்து வகை ஆயுதங்களையும் உடனே பயன்படுத்துவது தவிா்க்க முடியாது.

வேறு யாரிடமும் இல்லாத நவீன ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன; தாக்குதல் நடத்தப்பட்டால் எதைப் பயன்படுத்துவது என்பதை ரஷ்யாவே தீா்மானிக்கும்’ என்றாா்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles