இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என வலியுறுத்து ஒக்ரோபர் 10 திகதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என கரப்பான் பூச்சி ஜனதா கட்சி(CJP) தலைவர் அபிஜீத் திப்கே அறிவித்துள்ளார்.
ஞானேஷ் குமார் பதவி விலகவில்லை என்றால் டெல்லியை நோக்கிப் பேரணியாகச் சென்று ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்த திப்கே, ‘சலோ டெல்லி’ (Chalo Delhi) அழைப்பையும் விடுத்தார்.
மேலும், டெல்லி காவல்துறை தங்களைத் தடுத்தால், தடுக்கப்படும் இடமே போராட்டக் களமாக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.
வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியில் (SIR) முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் CJP குற்றம் சாட்டியுள்ளது.
ஒக்ரோபர் 10 போராட்டம் அமைதியான முறையில் மகாத்மா காந்தியின் வழியில் நடைபெறும் என உறுதியளித்த திப்கே, சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தலை விரும்பும் அனைத்துக் குடிமக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
