‘ஃபிளை டுபாய்’ விமானத்தை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்த இஸ்ரேல்

கடந்த 30ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி வந்த ‘ஃபிளை டுபாய்’ விமானத்தை சுட்டு வீழ்த்த இஸ்ரேல் தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

‘ஃபிளை டுபாய்’ (ஃபிளைட் 1073) விமானத்தில் இருந்த இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர முயன்றார். இஸ்ரேலில் உள்ள பென் குரியன் சர்வதேச விமான நிலையத்தின் மீது விமானத்தை மோதி, மிகப்பெரிய தாக்குதலை மேற்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், இஸ்ரேல் விமானப்படையினர் ‘ஃபிளை டுபாய்’ விமானத்துடன் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து இஸ்ரேல் வான் பரப்பை மூடிய நிலையில், போர் விமானங்கள் வானில் பறந்தன. மேலும், அவசரகால அமைப்பும் செயல்படுத்தப்பட்டது. அந்த விமானம் டெல் அவிவ் நோக்கி வந்தால், பாதுகாப்பு கருதி அதனை சுட்டு வீழ்த்த தயார் நிலையில் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

அதனால் விமானம் கடத்தப்பட்டதா என்பதை அறியவும் இஸ்ரேல் விமான படையின் போர் விமானிகள் முயற்சித்ததாக தகவல். அதற்குள் அந்த விமானம் சவுதி அரேபியா நோக்கிச் சென்றுள்ளது. அதன் பின்னர் தங்கள் முயற்சியை இஸ்ரேல் படையினர் கைவிட்டுள்ளனர். அதன் பின்னர் ‘ஃபிளை டுபாய்’ விமானம் சவுதி அரேபியாவில் தரையிறக்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles