கருங்கடலில் பயணித்த சரக்குக் கப்பல் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்; ஒருவர் பலி!

கருங்கடலில் இந்தியா்கள் மற்றும் அஜா்பைஜான் நாட்டினா் பயணித்த துருக்கிக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் மீது ரஷ்ய டிரோன்கள் நடத்திய தாக்குதலில் கப்பலின் கேப்டன் உயிரிழந்தாா்; 11 மாலுமிகள் மீட்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து உக்ரைன் அதிபா் வொலோடிமீா் ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை வெளியிட்ட ‘எக்ஸ்’ பதிவில், ‘உயிரிழந்த கப்டனனின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். கருங்கடல் பகுதியில் பாதுகாப்பை உறுதி செய்யவும், பதற்றத்தைத் தணிக்கவும் உக்ரைன் தொடா்ந்து ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை முன்மொழிந்து வருகிறது; உலக உணவுப் பாதுகாப்பை மீட்டெடுக்க சா்வதேச அழுத்தம் மிக அவசியமாகும்’ என்று வலியுறுத்தினாா்.

ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர, இரு தரப்புடனும் இந்தியா தீவிர பேச்சு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles