ஜேர்மனியில் சிறுமியிடம் தகாக முறையில் நடந்துகொண்ட ரோபோ பறிமுதல்

ஜேர்மனியின் கொலோன் (Cologne) நகரில் உள்ள ஒரு துரித உணவகத்திற்கு வெளியே, 16 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறப்படும் ரோபோ ஒன்றை ஜேர்மன் காவல்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலோன் காவல்துறையின் தகவலின்படி, ஒக்ரொபர் 10 ஆம் திகதி சனிக்கிழமையன்று இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நகர மையத்திற்கு அருகில் தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்த அந்தச் சிறுமியை நோக்கி, சுமார் 120 சென்டிமீட்டர் உயரமுள்ள சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ரோபோ ஒன்று பின்னாலிருந்து வந்துள்ளது.

அந்த ரோபோ சிறுமியின் பின்பகுதியைத் தொட்டு தட்டியதாகவும், இதனால் அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடியதாகவும் கூறப்படுகிறது.

இந்த ரோபோவை இயக்கினர் என கருதப்படும் 16 மற்றும் 19 வயதுடைய இருவரை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

சம்பவம் நடக்கும்போது அதைப் பற்றி கருத்து தெரிவித்துக்கொண்டே, அந்த இரு பதின்ம வயதினரும் சமூக ஊடகங்களில் அதை நேரலையாக ஒளிபரப்பியிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

அவசர அழைப்பு ஒன்றைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு அருகில் இருந்த சந்தேக நபர்களைக் கண்டறிந்த காவல்துறையினர், 16 வயதுடைய சந்தேக நபருக்கு சொந்தமான வாகனத்தின் பின்புறத்தில் அந்த ரோபோ இருப்பதைக் கண்டுபிடித்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக காவல்துறையினர் அந்த ரோபோவையும் இரண்டு அலைபேசிகளையும் பறிமுதல் செய்தனர்.

ரோபோவின் அசைவுகள் ஒருவரால் வேண்டுமென்றே கட்டுப்படுத்தப்பட்டதா அல்லது முன்பே திட்டமிடப்பட்ட செயல்பாடுகளின் விளைவா என்பது குறித்து அதிகாரிகள் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர்.

ரோபோ தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு மற்றும் தொலைவிலிருந்து இயக்கப்படும் இயந்திரங்கள் மூலம் செய்யப்படும் செயல்களுக்கான பொறுப்புக்கூறல் ஆகியவை குறித்து இச்சம்பவம் கேள்விகளை எழுப்பியுள்ளது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles