ரஜினியின் ஜெயிலர் 2 முதல் நாள் வசூல் 125 கோடி

நடிகர் ரஜினியின் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முதல் நாளில் உலகம் முழுவதும் ரூ.125 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் நேற்று (ஒக்.15) உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023இல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மோகன்லால், ஷிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். முதல் பாகம் போலவே இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ.125. 25 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே ரூ.70.25 கோடி வசூலித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles