கோயிலுக்கு வெளியே காத்திருந்த பக்தர்கள் மீது பாய்ந்த லொறி: 14 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கோயிலுக்கு அருகே காத்திருந்த பக்தர்கள் மீது லொறி ஒன்று பாய்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விபத்து இன்று அதிகாலை 1.30 மணி அளவில் நடந்துள்ளது. சீதலமாதா கோயில் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லொறி , அந்த கோயிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் மீது மோதியது. பின்னர் கோயிலின் வெளிப்புற சுற்றுச்சுவர் மற்றும் கதவின் மீது மோதிய நிலையில் நின்றுள்ளது. இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை மருத்துவமனையில் மாநில அமைச்சர் ராகேஷ் ஷுக்லா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். கள நிலவரத்தை முதல்வர் மோகன் யாதவ் கண்காணித்து வருவதாக அப்போது அவர் கூறினார். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய அரசு சார்பில் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50ஆயிரமும் நிவாரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் இரங்கல் தெரிவித்துள்ளார். மாநில அரசு சார்பில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய லொறி, செங்குத்தான பாதையில் கீழ்திசை நோக்கி இறங்கியுள்ளது. அப்போது தான் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த கோர விபத்து நடந்துள்ளது. அந்த பகுதியில் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அந்த கட்டுப்பாட்டை லொறி ஓட்டுநர் பின்பற்றவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த பகுதியில் இருந்த சாலை தடுப்புகள் மற்றும் காவல் துறை சோதனை மையத்தின் மீது மோதிய பின்னர் பக்தர்கள் மீது லாரி மோதியதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles