பிரான்ஸில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் – ஆயிரக்கணக்கானோர் கைது

பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கை செலவுகளை கண்டித்து நடத்தப்பட்ட பொது போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான வசதிகள் காரணமாக, மாணவர்கள் ஆரம்பித்த போராட்டம் தற்போது அரசாங்கத்திற்கு எதிரான பெரும் போராட்டமாக உருவெடுத்துள்ளது.

ஆரம்பத்தில் அமைதியாக ஆரம்பித்த போராட்டம் தற்போது வன்முறையாக மாறி வருகிறது. போராட்டக்காரர்கள் லியோனில் உள்ள சுற்றுலா அலுவலகத்திற்கு தீவைத்துள்ளனர்.

அதே நேரத்தில், மார்சேயில், ஒரு கூட்டம் நகர மண்டபத்திற்குள் நுழைந்து, அராஜகத்தைக் குறிக்கும் ‘A’ என்ற எழுத்தை சுவரில் எழுதியுள்ளது.

இந்நிலையில் பொலிஸார் கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பீரங்கியைப் பயன்படுத்தி குறைந்தது 1200 பேரைக் கைது செய்துள்ளனர்.

இவ்வாறான ஒரு நெருக்கடி மிக்க தருணத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் அமைதி காக்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டங்கள் 2018-ஆம் ஆண்டின் மஞ்சள் அங்கி இயக்கத்தை நினைவூட்டுகின்றன.

அதிகப்படியான பொதுக் கடன், பிரான்சின் கடன் வாங்கும் செலவுகளை 20 ஆண்டுகளில் இல்லாத உச்சத்திற்குத் தள்ளுவதால், மக்ரோன் மீது இது மேலும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles