காலி துறைமுகத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஈரானிய கச்சா எண்ணெய் கப்பலிலுள்ள பணியாளர்கள் 27 பேர் திடீர் சுகவீனமுற்றதால் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கப்பலில் இருந்த பணியாளர்கள் 27 பேர் திடீரென நோயுற்றதால் வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் அவர்கள் நேற்று பிற்பகல் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
காலி துறைமுகத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதியில் இவர்கள் நோயுற்றிருந்த வேளையில், இலங்கை கடற்படையின் இரண்டு டோரா படகுகள் மூலம் அவர்கள் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதால் அதுவரை அவர்கள் காலி துறைமுகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
