கொட்டும் மழைக்கு மத்தியிலும் 19ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் போராட்டம்

பலாலி மக்கள் தமது பூர்வீக வாழிடங்களையும் காணிகளையும் விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம், கொட்டும் மழைக்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 19ஆவது வாரமாக முன்னெடுக்கப்பட்டது.

கடந்த 36 வருடங்களாக காணிகளை இழந்த மக்கள் இராணுவத்தின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

தமது காணிகளில் இராணுவம் விவசாய நடவடிக்கைகள் மற்றும் வர்த்தக நிலையங்களை அமைத்து தமது சொந்த தேவைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில் தாம் நீண்ட காலமாக நிலங்கள், வீடுகள் அற்று வாழ்ந்து வரும் நிலையில் தமது வீடுகள் காணிகளை விடுவிக்க வேண்டும் என கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பலாலி சந்தியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை 19ஆவது வாரமாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles