அர்னாப் புயலால் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை – 85,000 பேர் முகாம்களில் தஞ்சம்

ஆந்திராவில் அர்னாப் புயலால் நேற்று பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. மேற்கு மத்திய வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று அர்னாப் புயலாக மாறியது.

இந்த புயல் 20 கி.மீ வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான விஜயநகரம், விசாகப்பட்டினம், குண்டூர், பாபட்லா, கோதாவரி மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

இதனால் விசாகப்பட்டினத்தில் 20 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழுப்பின. நள்ளிரவு 2 மணியில் இருந்து அதிகாலை 4 மணிக்குள் பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே யானம் அருகே அர்னாப் புயல் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 125-135 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசும் என்றும் பல இடங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அர்னாப் புயல் காரணமாக 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மழை பாதித்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அமராவதியில் இருந்து நேற்று மாலை சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள், பேரிடர் மீட்பு குழு அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது: பல்வேறு மாவட்டங்களில் 290 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த மையங்களில் சுமார் 85 ஆயிரம் மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles