T-20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை படைத்தார் ரஷீத் கான்

ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கான், ஆடவர் சர்வதேச T 20 கிரிக்கெட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளார்.

ஷார்ஜாவில் கடந்த வியாழக்கிழமை (29) நடைபெற்ற சிம்பாப்வே அணிக்கெதிரான இரண்டாவது T 20 போட்டியில், சிம்பாப்வே வீரர் தடிய்வனாஷே மருமணியை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் ரஷீத் கான் இந்த மைல்கல்லை எட்டினார்.

தனது 120ஆவது சர்வதேச T 20 போட்டியில் இந்தச் சாதனையைப் படைத்துள்ள 28 வயதான ரஷீத் கான், 13.96 என்ற சராசரியிலும் 6.13 என்ற ஓட்டச் சிக்கன விகிதத்திலும் விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இதுவரை இரண்டு முறை ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளதுடன், 3 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதே அவரது சிறந்த பந்துவீச்சுப் பெறுதியாகும்.

சர்வதேச T 20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் ரஷீத் கான் 200 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் அடில் ரஷீத் 171 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles