நடிகர் சிம்பு மீண்டும் நடிகை நயன்தாரா உடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் இருவரும் பத்து ஆண்டுகளுக்கு இணைந்து நடிக்கவிருக்கிறார்கள்.
ட்யூட் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் கீர்த்திஸ்வரன். இவரது இயக்கத்தில்தான் சிம்பு – நயன்தாரா இணைந்து நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தீபாவளியை முன்னிட்டு நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் 2 படம் வரும் நவ.6ஆம் தேதி வெளியாகிறது. சுந்தர் சி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு 60 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் அரசன் படமும் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. பின்னர், தள்ளிப் போகியுள்ளது. அரசன் உலகத்தில் இருந்து 7 நிமிஷ காட்சிகள் வெளியாகுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், நயன்தாராவும் சிம்பும் இணைந்து கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
கடைசியாக இவர்கள் இருவரும் பாண்டியராஜின் இது நம்ம ஆளு என்ற படத்தில் 2016ல் இணைந்து நடித்திருந்தார்கள். அதற்கும் முன்னதாக வல்லவன் எனும் படத்தில் 2006இல் நடித்திருந்தார்கள். தற்போது, டிசம்பரில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் நாயகனாக கீர்த்திஸ்வரன் இயக்கவிருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியாகியதும் பின்னர் வேறு ஒருவர் இயக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது நினைவுகூரத்தக்கது.
