அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி அடைந்த தோல்விக்கு ஈரான் மீதான போரும் ஒரு காரணமாக அமைந்திருக்கலாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரு சபைகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ள நிலையில், பொக்ஸ் நியூஸ் ஊடகத்துக்கு தொலைபேசி மூலம் வழங்கிய நேர்காணலில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
“ஈரான் விவகாரமும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். அதேவேளை, ஈரான் தொடர்பாக நான் மேற்கொண்ட நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொண்டிருந்தனர் என நினைக்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.
பெற்றோல் விலை உயர்வால் ஏற்படும் குறுகிய காலப் பாதிப்புகளை ஏற்றுக்கொள்ள வாக்காளர்கள் விரும்பியிருக்க மாட்டார்கள் என்றும் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், தனது அமைச்சரவையில் மாற்றங்களைச் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் அவர் கூறினார்.
