அமெரிக்காவின் வேர்ஜினியா மாநிலத்தில் தனது மனைவியைக் கொலை செய்ததார் என சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நரேஷ் பட், மனைவியின் சடலத்தைத் துண்டுகளாக வெட்டியதை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.
தனது மனைவி மம்தா காப்லே பட் (28), தற்கொலை செய்துகொண்டதாகவும், அவரது சடலத்தைக் கண்ட பின்னர் அச்சமடைந்து அதனை மறைப்பதற்காகத் துண்டுகளாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற மனைவியின் காணாமல் போன சம்பவம் மற்றும் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் தொடர்பில் நரேஷ் பட் மீது கொலை, சடலத்தை அவமதித்தல் மற்றும் சடலத்தை மறைத்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடைபெற்று வரும் நீதிமன்ற விசாரணையில் சாட்சியமளித்த அவர், 2024ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி இரவு தனது குழந்தையுடன் உறங்கச் சென்றதார் எனவும், மறுநாள் அதிகாலை சுமார் 4 மணியளவில் எழுந்தபோது மனைவி படுக்கைக்கு அருகில் வாந்தியுடன் சுயநினைவின்றிக் கிடந்ததார் எனவும் தெரிவித்துள்ளார்.
அவருக்கு அருகில் மாத்திரைகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லி மருந்துப் பொதி காணப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, சுமார் ஒரு மணித்தியாலம் மனைவிக்கு முதலுதவி மற்றும் உயிர்காக்கும் சிகிச்சைகளை வழங்க முயற்சித்ததார் எனவும், அவர் உயிரிழந்துவிட்டதை உணர்ந்த பின்னர் சடலத்தை மறைக்கத் தீர்மானித்ததார் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
மனைவி உயிரிழந்ததைக் கண்டதும் பொலிஸாரின் அவசர உதவிப் பிரிவான 911ஐத் தொடர்புகொள்ளாதது ஏன் எனக் கேட்கப்பட்டபோது, அச்சமும் பதற்றமும் காரணமாக அவ்வாறு செய்யத் தவறினார் என அவர் பதிலளித்துள்ளார்.
முதலில் சடலத்தை பொடோமக் ஆற்றில் வீசுவதற்கு எண்ணியதாகவும், பின்னர் சடலத்தை மறைப்பதற்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஹோம் டிப்போ (Home Depot) விற்பனை நிலையத்துக்குச் சென்றதார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சடலத்தை குப்பைத்தொட்டியில் போடுவதற்கு முயற்சித்தபோது அது பொருந்தாததால், ரம்பம் ஒன்றைப் பயன்படுத்தி சடலத்தைத் துண்டுகளாக்க முயன்றதாகவும், பின்னர் அதனைப் பல குப்பைப் பைகளில் இட்டு அகற்றியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
எனினும், சடலத்தை முழுமையாகத் துண்டுகளாக்க முடியவில்லை என்றும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மம்தா காணாமல் போனதாக 2024ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5ஆம் திகதி முறைப்பாடு செய்யப்பட்டது. அவர் வேலைக்குச் செல்லாததைத் தொடர்ந்து இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதனையடுத்து, ஓகஸ்ட் 22ஆம் திகதி நரேஷ் பட் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது தம்பதியினர் வசித்த படுக்கையறை மற்றும் குளியலறையில் இரத்தக் கறைகள் கண்டறியப்பட்டதுடன், தலைமுடித் துணுக்குகள் காணப்பட்ட மின்சார ரம்பம் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் மம்தாவின் சடலம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
நரேஷ் பட் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளில், முதல்நிலை கொலைக் குற்றத்துக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம். சடலத்தை மறைத்தல் மற்றும் அவமதித்தல் ஆகிய குற்றங்களுக்கு அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கில் தனது மனைவி தற்கொலை செய்துகொண்டதாக நரேஷ் பட் முன்வைத்துள்ள வாதம் நீதிமன்ற விசாரணையில் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
