Friday, February 6, 2026
Homeகர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

INDIA: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று காலை ஆரம்பமானது.

வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே காங்கிரஸ் கட்சி மாநிலத்தின் பல்வேறு தொகுதிகளில் முன்னிலை வகித்து வந்தது.

மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 138 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருவதை அடுத்து, காங்கிரஸ் கட்சியின் வெற்றி உறுதியாகி இருக்கிறது.

கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, ராகுல் காந்தி அம்மாநில மக்களுக்கு தனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

வெறுப்புணர்வுகளை எதிர்த்து கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் காங்கிரஸ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி 64 தொகுதிகளில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular