அமெரிக்கா – ஈரான் போரால் எரிபொருட்கள், எரிவாயு தொடர்பிலேயே நாடுகள் கவனம் செலுத்துகின்றன. இந்த நிலையில், சீனா சத்தமின்றி அதிகளவில் வெள்ளியை இறக்குமதி செய்து வருகிறது.
ப்ளும்பேர்க் அறிக்கையின்படி, கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் சீனா 836 தொன் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஒவ்வொரு மார்ச் மாதமும் 306 தொன் அளவிலான வெள்ளியையே சீனா இறக்குமதி செய்துள்ளது. இந்த நிலையில், தற்போதைய இறக்குமதி மிகப்பெரியளவிலானதாகும்.
சீனா ஏன் வெள்ளியை அதிகளவில் இறக்குமதி செய்கிறது?
இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, தங்கத்தை விட வெள்ளியின் விலை குறைவு. இதனால், சீன முதலீட்டாளர்கள் வெள்ளியில் அதிகளவில் முதலீடுகிறார்கள்.
மற்றையது சூரிய சக்தி ஆற்றல் மற்றும் அது சம்பந்தமான உற்பத்திகளில் சீனா அதிக ஆர்வம் காட்டுகிறது. இதற்கு வெள்ளி மிக முக்கியமானது. இதனால், வெள்ளியை அதிகளவில் இறக்குமதி செய்கிறது என்று கூறப்படுகிறது.
