
ஆஸ்திரேலியா கோரல் கடல் (Coral Sea) பகுதியில் நடத்தப்பட்ட ஆழ்கடல் ஆய்வில், இதுவரை மனிதக் கண்களுக்குத் புலப்படாத 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கடல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் சிசிரோ (CSIRO) விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய இந்த தேடுதல் வேட்டையில், கடலின் ஆழமான மர்மங்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் தொடங்கியுள்ளன..
பவளப்பாறைகள் முதல் விசித்திரமான மீன்கள் வரை ஆழ்கடலில் ஒளிந்திருந்த இந்த புதிய உலகத்தை பற்றிய அதிரடித் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் கோரல் கடல் (Coral Sea) பகுதியில், விஞ்ஞானிகள் ஒரு பெரிய ஆய்வு செய்துள்ளனர்..
அந்த ஆய்வில் கடலின் ஆழமான பகுதிகளில் இதுவரை மனிதர்களுக்குத் தெரியாத 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 110 -க்கும் மேற்பட்ட உயிரினங்கள் இந்த உயிரினங்கள் மீன்கள், சுறா போன்ற கடல் உயிரினங்கள், நண்டு, கடல் பூச்சிகள், பவளப் பாறை உயிரினங்கள் போன்ற பல வகைகளாக உள்ளன. சில இடங்களில் இந்த எண்ணிக்கை 200-க்கும் மேல் கூட இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்..
இந்த ஆய்வு, கடலின் மிகவும் ஆழமான (200 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை) பகுதிகளில் நடைபெற்றது.. இந்தப் பகுதிகள் இதுவரை மிகக் குறைவாகவே ஆராயப்பட்டிருந்தன.. சிசிரோ (CSIRO) என்ற ஆஸ்திரேலிய அறிவியல் நிறுவனம் மற்றும் சர்வதேச கடல் ஆய்வு குழு சேர்ந்து இந்த ஆராய்ச்சியை செய்துள்ளனர்..
ஆய்வுக்குப் பயன்படுத்தப்பட்ட கப்பல் கடலில் சென்று, தேவையான மாதிரிகளையும் சேகரித்து, அதற்கு பிறகே ஆய்வகத்தில் புதிய இனங்களை அடையாளம் கண்டுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட ஆய்வில்தான் 110-க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.. அவை அனைத்துமே அரிய வகை உயிரினங்கள்தான்.. அதாவது பல அரிய வகை கடல் நண்டுகள் (Squat Lobsters), வித்தியாசமான கடல் பஞ்சுகள் (Sponges) மற்றும் இதுவரை பார்த்திராத மென்மையான பவளப்பாறைகள் போன்றவை அடங்கும்.
இது கடலின் ஆழத்தில் இன்னும் தெரியாத ஒரு பெரிய உயிரியல் உலகம் இருப்பதை காட்டும் முக்கியமான கண்டுபிடிப்பாகவே கருதப்படுகிறது.
