அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை உயர்வு

அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் சுமார் ஒரு இலட்சத்து 84 ஆயிரத்து 800ஆக உயர்ந்துள்ளதாக அவுஸ்திரேலிய புள்ளிவிவரவியல் பணியகத்தின் புதிய தரவுகள் காட்டுகின்றன.

அவுஸ்திரேலியாவில் பிறந்த இலங்கையர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை இந்தப் புள்ளிவிவரம் வெளிப்படுத்தியுள்ளது.

கடந்த 2023 ஜூனில் இந்தத் தொகை ஒரு இலட்சத்து 58 ஆயிரத்து 300 ஆகவும் 2024 ஜூனில் ஒரு இலட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகவும் காணப்பட்டது. 2013ஆம் ஆண்டில் ஒரு இலட்சத்து 10 ஆயிரத்துக்கும் சற்று அதிகமாக இருந்த இலங்கையர்களின் எண்ணிக்கை 2025 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட ஒரு இலட்சத்து 85 ஆயிரத்தை எட்டியுள்ளது.

தற்போது அவுஸ்திரேலியாவில் வெளிநாட்டில் பிறந்த அதிக மக்கள்தொகை கொண்ட முதல் 10 நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் இலங்கை 9ஆவது இடத்தில் உள்ளது. இதேநேரம், இந்தப் பட்டியலில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். அங்கு, 9 இலட்சத்து 71 ஆயிரத்து 20 இந்தியர்கள் வாழ்கின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles