8 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிறுமியின் தாய்வழி உறவினரான 21 வயது இளைஞர் ஒருவரே இந்தப் படுபாதகச் செயலைச் செய்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் முறைப்பாட்டை பதிவு செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
