பெய்ஜிங்கில் கனமழை: வெள்ளத்தில் சிக்கி 33 பேர் பலி, 18 பேரை காணவில்லை

Beijing: சீன தலைநகர் பெய்ஜிங்கில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், 18 பேர் காணாமல் போயுள்ளனர்.

பெய்ஜிங்கில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்ததால், நகர் முழுதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்கில் தொடர்ந்து பெய்த கனமழையால் 59,000 வீடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. கிட்டத்தட்ட 1,50,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளன. 15 ஆயிரம் ஹெக்டேர் பயிர் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

100-க்கும் மேற்பட்ட பாலங்களும் வீதிகளும் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

சேதத்தின் அளவைக் கருத்தில் கொண்டால், நகரை மீண்டும் கட்டியெழுப்ப  3 ஆண்டுகள் வரை ஆகும் என பெய்ஜிங் துணை மேயர்
சியா லின்மாவோ தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles